கனவுகளற்ற உலகில்
நித்தம் தோன்றும்
நினைவுகளுடன் மட்டும்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
உன்னை காணும் வரை ..
புழுக்கம் நிறைந்த இரவில்
ஜன்னலைத் திறந்த உடனே
தன்னை ஸ்பரிசிக்கச் செய்ய
என்னைத் தீண்டிச் செல்லும்
இதமான தென்றலைப் போல்
என் முன்னே வந்தாய்
ஒரு சுப நாளில்..
மாலை நேரத்தில் ,
கடற்கரையோரம்
அலைகள் காலை வருட,
தனிமையில் அமர்ந்திருக்கும் நேரம்,
அறிவிப்பின்றி திடீரென்று வந்த
மெல்லிய தூரலில்
நனைந்தது போல் இருந்தது அன்று ..
சுவாசம் கொள்ளும்
ஒவ்வொரு முறையும்
யோசிக்க வைத்தாய்
"இந்நேரம் நீ என்ன
செய்து கொண்டிருப்பாய்" என்று ..
பட்டாசு வெடிக்க
ஆசைப்படும் குழந்தைக்கு
தீபாவளி தினத்தை நினைத்தால்
தோன்றும் எதிர்பார்ப்புகளுடன்
காத்திருக்கின்றேன்
ஒவ்வொரு நிமிடமும் ,
உனக்காக..
No comments:
Post a Comment