எனது கவலைகள் யாவும்
உன் உதட்டோர சிரிப்பில்
மறந்திட வேண்டும் ..
உனை மறந்து
நீ அழும் போது
என் தோள் தந்து நான்
ஆறுதல் தர வேண்டும் ..
உன் மடி மீது
தூங்கும் நேரத்தில்
கருவில் இருக்கும்
குழந்தையின் இதத்தை
நான் உணர வேண்டும் ..
நிலவு இல்லாத நாட்களிலும்
நிலவே , உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்ட
நீ கேட்க வேண்டும் ..
என் மீது படர்ந்து
என்னன்னோவோ
நீ பேச ,
உனக்காக நான்
விழித்திருக்கும் போது ,
உன்னை மறந்து
நீ தூங்கும் நிமிடங்களும்
கவிதையாகத் தான்
எனக்கு தெரிய வேண்டும் ..
அப்பமாக இருந்தாலும் சரி ,
அமிர்தமாக இருந்தாலும் சரி ,
எச்சில் படுத்தி நீ தந்த
பின் தான் நான் உண்ண வேண்டும் ..
சின்ன , சின்ன
சண்டைகளுக்கு பிறகு ,
தோன்றும் சமாதானத்தில்
நமது உறவு மேலும்
வளப்பட வேண்டும் ..
இவை யாவும் நடக்க
நீ என் மகளாக
பிறக்க வேண்டும் அம்மா ,
என் மறு ஜென்மத்தில்..
No comments:
Post a Comment