என் பிள்ளைக்காக
வாழ ஆசைபடும்
எனது எதிர்கால நாட்களின்
நிகழ் காலம் நீ..
கோடி ரூபாய்
கொட்டித் தந்தாலும்
எனக்காக செலவு செய்ய
போதாது உனக்கும் ,
தனக்கென்றே சேர்த்து வைக்கத்
தெரியாத உன் கணக்குக்கும் ..
தெரியாத வழியில்
நான் சென்றால் கூட
புதையல் தான் கிடைக்கும் ,
"பத்திரமாய் போய்ட்டு வாப்பா"
என்று கூறும் உன் அக்கறை
என்னுடன் இருக்கும் பொழுது ..
நான் கேட்கும்முன்னே
எனக்குத் தேடித் தேடி
நீ சேர்த்த பொக்கிஷங்கள் எல்லாம்
எனக்காகத் தேய்ந்து போன
உன் பாத ரேகைகளுக்கு
ஈடாகுமா .. ??
எப்பொழுதும் என்னுடன்
இருக்க ஆசைப்படுவதால்
நீயும் எனக்கு ஒரு நிழல் தான் ,
என் சுமை கூடாதிருக்க
உன் உருவம் தொலைத்த
என் கருப்பு நிழல் ..
No comments:
Post a Comment