யாருமில்லாத
ஒற்றைவழிச்சாலையின்
இருபுறமும் உள்ள மரங்கள்
எதற்காக தங்களை அசைத்து
காற்றை தந்து
கொண்டிருக்கின்றன ..
விழிக்க வெறுத்து
தூங்குபவனின் ஜன்னலிலும்
எதற்காக விடியல்
எட்டிப் பார்க்கிறது ..
காண்பது நிஜம் அல்ல
என்று உணர்ந்தும்
எதற்காக கண்கள்
தினமும் கனவு காண்கிறது ..
வெள்ளை உருவத்தின்
நிழலும் எதற்காக
கறுப்பாக தென்படுகிறது ..
மழைக்காலத்தில்
வெறுக்கும் மழையை
எதற்காக மனம்
வெயில் காலத்தில் மட்டும்
தேடுகிறது ..
இயல்பாக நிகழும்
இவை போலத்தானே
உணர்கிறேன் ,
நீ பார்க்காத போதும்
உனைப் பார்க்கத் துடிக்கும்
என் இதயத்தின் இயக்கத்தை ..
No comments:
Post a Comment