அருகில் நீ இருந்த
நொடிகளில் உணரவில்லை,
உன் நட்பு
ஒரு வைரக்கல் என்று ...!!
வெறும் கண்ணாடிக்கல்லாக
பார்த்த பாவத்தினால் தானோ,
இன்று என் மனது
கல்லடி பட்ட கண்ணாடியாக
சிதறிக் கிடக்கின்றது ...?!
ஆனால் ஒரு உண்மை...
எதிரில் நீ இல்லாவிட்டாலும்,
சிதறிக் கிடக்கின்ற
இந்த கண்ணாடித் துண்டுகள்
ஒவ்வொன்றிலும்
உனது நினைவுகள் தான்
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன ...
இப்படிக்கு,
வைரத்தை தொலைத்த
அதிர்ஷ்டமில்லாத என் நட்பு...
No comments:
Post a Comment