Wednesday, April 21, 2010

டீன் ஏஜ் கடிதங்கள் 4 ..

யாரும் இல்லாத
பாதையில்
புதிதாகச் செல்லும்
பயணியின் தவிப்புதான்
எஞ்சியிருக்கும் எனக்குள் ,

நீ எதிர்வர
நான் நடக்கும்பொழுது
எனைத் தீண்டும்
உன் பார்வையை
ஏற்கும் வரை ..

Wednesday, April 7, 2010

நட்பு ..

மனதிற்குள்
தாய்மை
பிரசவிக்கும்
உன்னத உணர்வு ..

மழை ..

பூமி
தன் பசுமையை
பிரசவித்துக்கொள்ள,
வானம்
சிந்தும்
உயிர்த்துளி ..

Monday, April 5, 2010

சின்னச் சின்ன ஆசைகள் ..

மழை நின்ற
மாலையில்,
யாருமில்லா
சாலையில்,
உன் கைகோர்த்து
கதை பேசி
மெல்லச் செல்ல..


எனை மறந்து
நான் தூங்கும்
நெடுநேர இரவில்
எனக்காக பூக்கும்
உன் புன்னகையில்
என் கனவு முடிந்து,
கண் திறந்து
பார்க்கும்பொழுது
என்னெதிரே நீ நின்று
எனைப் பார்த்து
பூக்கும் உன்
புன்னகையில்
என் நனவு தொடங்க..

மே மாத வெயில்
உன்மீது படாதிருக்க
நான் குடை பிடிக்க,
எனக்காக
"உச்" கொட்டி,
உன் துப்பட்டாவால்
எனக்கு நீ நிழல் தர..

முழு நிலவின்
வெளிச்சம் மட்டும்
நம்மைச் சூழ்ந்திருக்கும்
மொட்டை மாடியில்,
என் தோள்சாய்ந்து
நீ நமது
ஆரம்ப நாட்களின்
நினைவுகளைப் பேச..

உதிர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும்,
உன் அன்பின் மடியில் மடிய ..